International

37ஆவது ஆசிய மற்றும் பசுபிக் வலய மாநாடு நாளை கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது!

ஐக்கிய நாடுகள் உணவு சபையின் மற்றும் விவசாய நிறுவனத்தின் 37ஆவது ஆசிய மற்றும் பசுபிக் வலய மாநாடு நாளை கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது.

நாளை ஆரம்பமாகும் குறித்த மாநாடு எதிர்வரும் 22ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் உள்ள பல நாடுகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட விவசாய அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் இதில் கலந்து கொள்ளவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த மலேசியா, மாநாட்டில் சீனா, ஜப்பான், பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட 35 நாடுகளைச் சேர்ந்த விவசாய அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *