நாட்டின் தற்போதைய அவசரகால நிலையில் மக்களுக்கான ஜனாதிபதியின் சிறப்பு அறிவித்தல்.
பொய்யான பல தகவல்கள், ஜனாதிபதி ஆகிய என்னால் கூறப்பட்டவை என, பல்வேறுபட்ட இணையத் தளங்கள், தொலைபேசித் தகவல்கள் (WhatsApp, Viber, FaceBook messenger போன்றவை) மற்றும் சமூக ஊடகங்களின் மூலம் பரப்பப்படுகின்றன.
இவை தவறான கருத்துக்களையே உருவாக்கக்கூடும் என்பதனால் –
எனது அதிகாரபூர்வ அறிக்கைகள் மற்றும் அறிவிப்புகள் என்பன எனது அதிகாரப்பூர்வ இணையத் தளங்கள் மற்றும் சமூக ஊடக பக்கங்கள் மூலமாக மட்டுமே பகிரப்படும் என்பதனை உங்களுக்கு அறியத் தருகின்றேன்!
