குச்சவெளி

இலங்கையில் இன்றைய வானிலை அறிக்கை

ஊவா, கிழக்கு, வடமத்திய மாகாணங்களிலும் மற்றும் ஹம்பாந்தோட்டை, முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப் பிரதேசங்களில் குறிப்பாக ஊவா, திருகோணமலை மாகாணங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *