குச்சவெளி

தடுப்பூசியால் மாத்திரம் கொரோனாவை அழித்திட முடியாது!!!

தடுப்பூசியால் மாத்திரம் கொரோனா வைரஸிலிருந்து முழுமையாக பாதுகாப்பு பெற முடியும் என்பதற்கு எந்த ஆதாரமும் இதுவரை உலகில் முன்வைக்கப்படவில்லை. தடுப்பூசி போட்டவர்கள்,போடாதோர்,அனைவரும் சுகாதார நடவடிக்கைகளை தொடர்ச்சியாக பின்பற்ற வேண்டுமென தொற்றுநோய் ஆய்வு பிரிவின் பிரதானி விசேட வைத்திய நிபுணர்  சுதத் சமரவீர கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை ஊடங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனை தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில் தடுப்பூசியால் மாத்திரம் கொவிட்19 வைரஸிலிருந்து முழுமையாக பாதுகாப்பு பெற முடியும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

கொவிட்19 தடுப்பூசியை பெற்றுக்கொள்ள மது அல்லது புகைபிடிக்கும் பழக்கம் ஒரு தடையாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனமோ அல்லது தடுப்பூசியை தயாரித்த ஆராய்ச்சி நிறுவனங்களோ எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை.

ஆனால் அவற்றில் இருந்து விலகி இருப்பது உடல் ஆரோக்கியத்திற்க்கு சிறந்தது என்பதனை சுட்டிக்காட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *