AllInternationalIT News

இணையத்தில் லீக் ஆன Nokia 5ஜி ஸ்மார்ட்போன்

ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் ஏப்ரல் 8 ஆம் தேதி புது ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதாக சமீபத்தில் அறிவித்தது. இந்த நிலையில், நோக்கியா எக்ஸ்20 ஸ்மார்ட்போனின் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் இடம்பெற்று இருக்கிறது.
கீக்பென்ச் விவரங்களின்படி புது நோக்கியா ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 480 5ஜி பிராசஸர் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. அந்த வகையில் இது குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போனாக இருக்கும். மற்ற அம்சங்களை பொருத்தவரை 6 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

ஏற்கனவே வெளியான தகவல்களின்படி புது நோக்கியா ஸ்மார்ட்போன் 128 ஜிபி மெமரி, புளூ மற்றும் சேன்ட் நிறங்களில் கிடைக்கும் என கூறப்பட்டது. இதுமட்டுமின்றி 6 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி கொண்ட நோக்கியா எக்ஸ்10 ஸ்மார்ட்போனும் பின்னர் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
இந்தியாவில் 5ஜி வசதி கொண்ட நோக்கியா எக்ஸ் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படாது என கூறப்படுகிறது. இந்த சீரிஸ் ஐரோப்பியாவில் அறிமுகம் செய்யப்படும் என இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. (Malaimalar)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *