குச்சவெளி

அரசியல் கைதிகளில் பாரதூரமான குற்றம் புரிந்தோர் தவிர ஏனையோருக்கு விரைவில் விடுதலை!!!

தமிழ் அரசியல் கைதிகளில் பாரதூரமான குற்றங்கள் செய்தவர்கள் தொடர்ச்சியாக தடுப்புக்காவலில் இருப்பர் அவர்களை விடுவிக்க முடியாது. ஏனையோர் விரைவில் ..விடுவிக்கப்படுவார்கள் என பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசுகையில்..

சிறைச்சாலைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதியும் நானும் ஆராய்ந்து வருகின்றோம். விடுவிக்கக்கூடிய கைதிகளை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுப்போம்.

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தியிருந்தேன். அதன்போது தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரம் தொடர்பிலும் பேசப்பட்டது. அந்தப் பேச்சில் நான் கேட்டுக்கொண்டமைக்கமைய சிறைச்சாலைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பெயர்ப்பட்டியல் பின்னர் கிடைக்கப் பெற்றது.

இந்த விவகாரத்தை நீதி அமைச்சு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியவற்றின் கவனத்துக்கும் கொண்டு வந்துள்ளோம்.

தமிழ் அரசியல் கைதிகளில் பாரிய குற்றங்கள் செய்தவர்களை விடுவிக்க முடியாது. ஏனையோர் விரைவில்..விடுவிக்கப்படுவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *