குச்சவெளி

இலங்கை முழுவதும் விசேட ஆய்வு நடவடிக்கை ஆரம்பம்!

மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி விபத்துக்கள் காரணமாக தினமும் ஐந்து முதல் ஆறு உயிர்கள் இழக்கப்படுவதாக பொலிஸ் ஊடகத் தொடர்பாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இந்த விபத்துகள் நடக்காமல் இருப்பதற்காக மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளை ஆய்வு செய்வதற்கான நடவடிக்கை இன்று முதல் மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.

சோதனை செய்யப்படும் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளின் தரம் மற்றும் அவற்றின் இயங்கும் நிலை ஆராயப்படும்.

இலங்கையில் பல்வேறு பகுதிகளில் நேற்று ஏற்பட்ட வீதி விபத்துக்களால் மாத்திரம் 8 பேர்கள் உயிரிழந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *