குச்சவெளி

இலங்கை வக்பு சபை மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

சகல பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு. 01.11.2020 ஆம் திகதி சுகாதர அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிக்கையின் பிரகாரம் கொவிட் 19 காரணமாக மத வழிபாட்டுத் தளங்களில் அதிக நபர்களுக்கு தடை விதிக்கப்பட்டதை கருத்திற் கொண்டு இலங்கை வக்பு சபையினால் சில நடைமுறைகள் மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளது.

1. சகல பள்ளிவாசல்களிலும் எந்த நேரத்திலும் 25 நபர்கள் மாத்திரமே அனுமதித்தல். அவ்வாறு 25 நபர்களை தேர்ந்தெடுக்கும் முறை ஜமாத்தினருக்கு முன்னரே அறிவிக்கப்பட வேண்டும்.

2. அனைத்து சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு துறையினரால் விதிக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் வக்பு சபையின் பணிப்புரைகள் மிக கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும்.

3. மேல்மாகாணத்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட அல்லது வரையறுக்கப்பட்ட பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களும் இலங்கை வக்பு சபையின் மறு அறிவித்தல் வரை மூடப்படல் வேண்டும்.

குறிப்பு: மேற்கூறப்பட்ட பிரகாரம் பேணுவது சிரமம் அல்லது முடியாது எனக் கருதுகின்ற பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள் அல்லது பொறுப்பாளர்கள் மறு அறிவித்தல் வரை தமது தற்துணிவின் பேரில் பள்ளிவாசல்களை மூடுவதற்கு முடியும்.

இலங்கை வக்பு சபையின் பணிப்புரைக்கமைய,
ஏ. பீ. எம். அஷ்ரப்
பணிப்பாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *