குச்சவெளி

ஐரோப்பாவில் 5பவுன்ட் செலவில் கொரோனாவுக்கான மருந்து கண்டு பிடிப்பு விஞ்ஞானிகள் மகிழ்ச்சி!!!

உலகலாவிய ரீதியில் பல உயிர்களை காவு கொன்ட கொவிட்19 எனும் கொரோனா தொற்றானது இன்னும் ஓய்ந்த பாடில்லாத இந்நிலையில் பிரித்தானியாவைச்சேர்ந்த விஞ்சானிகள் வெறும் 5பிரிட்டன் பவுன்கள் செலவில் அதற்க்கான மறுந்தை கண்டு பிடித்து அசத்தியுள்ளனர்.

சாதாரண ஸ்டிராய்டு வகை மருந்தாகிய ‘டெக்சாமிதாசோன்’ கொரோனா சிகிச்சையில் நல்ல பலன் கொடுப்பதாக அறியப்பட்டுள்ளது. இது ஆபத்தான கட்டத்தில் உள்ள நோயாளிகளை காப்பாற்றுவதாக கூறப்படுகிறது. இது கொரோனா போராட்டத்தில் மிகப் பெரிய திருப்புமுனை என அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். 2 லட்சம் நோயாளிகளுக்கு தேவையான மருந்து இருப்பில் உள்ளது இது எதிர்கால தேவைக்கும் போதும் என கருதப்படுகிறது.

‘டெக்ஸசமிதாசோன்’ எனப்படும் மருந்து சாதாரணமாக மூட்டுவலிக்கும், அலர்ஜிக்கும் பயன்படக் கூடியது. அதுவும் 5 பவுண்ட் செலவில் கொரோனாவை குணப்படுத்த முடியும் என்பதால் இதற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

ஆக்ஸ்போர்டு பல்கலை விஞ்ஞானிகள் இம்மருந்தினை சோதித்து பார்த்தனர். வெண்டிலேட்டரில் சிகிச்சை பெறுபவர்களில் 8 ல் 3 பேர் உயிரிழந்த நிலையில் இம்மருந்தின் பயன்பாட்டிற்கு பிறகு 2 பேர் மட்டுமே உயிரிழந்ததை கண்டுபிடித்தனர். இம்மருந்து ஊசியாக செலுத்தப்படும் போதும் இறப்பு விகிதம் 5ல் ஒரு பங்காக குறைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *