கருத்து மேடை
கிண்ணியா -ஆர்.சதாத்
சரியான விடயத்தை பிழையாக, பிழையான விடயத்தை சரியாக, சரியான விடயத்தை சரியாகச் செய்தல்
ஒரு விடயத்தைச் செய்வதற்கு முன் அந்த விடயம் சரியானதாக இருக்கும் ஆனால், அதனை நாம் நடைமுறைப்படுத்தும் பொழுது பிறரால் தவறானதாகக் கருதப்பட்டு அவ்விடயம் முடியாமலும் போய்விடுகிறது. இதற்கு காரணம் என்ன? சிலர் சரியான விடயத்தைச் செய்வதற்கு முனைந்து இருப்பார்கள். ஆனால், அந்தச் செயலால் முரண்பாடுகளும் விமர்சனங்களும் எழுகின்றன.
உண்மையில் செய்ய வந்த விடயம் சிறப்பானதாக இருக்கும். அந்தச் சிறந்த விடயம் ஏன் நடைமுறை படுத்துகின்ற பொழுது பிறரால் தவறாக நோக்கப்படுகிறது.? அந்த விடயம் சரியானதாக இருக்கலாம். ஆனால், அதனை நடைமுறைப் படுத்துகின்ற பொழுது அணுகுமுறை பிழையானதாக இருக்கும்.
அந்த இடத்தில் சரியான செயல் பிழையாகச் செய்தாலும் பிழையான செயல் சரியாகச் செய்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாமல்தான் இருக்கும். சரியான செயலைச் சரியான அணுகுமுறையோடு செய்கின்ற பொழுது மட்டுமே அந்த விடயம் வெற்றி பெற்ற விடயமாக மலரும்.
உதாரணமாக:- வகுப்பறையில் ஆசிரியர் ஒருவர் கற்பிப்பதற்காக ஒரு விடயத்தை தெரிவு செய்கிறார். என்றாலும் அந்த சரியான விடையத்தை சரியான அணுகுமுறை நுட்பமுறைகள் போன்றவைகளோடு மாணவர்களுக்கு வழங்குகின்ற பொழுதுதான் அது சரியாக மாணவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதன் விளக்கத்தை பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.மாறாக அந்தச் சரியான விடயம் மாணவர்களுக்குப் பொருத்தமற்ற அணுகுமுறைகளோடு கற்பித்தால் அந்த நல்ல செயலும் பிழையாகவே நோக்கப்படும்.
சிலர் வாதிடுவது உண்டு “எனது விடயம் நல்லதுதானே சிலர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லையே? ஏன் விமர்சிக்கிறார்கள்” என்ற கவலை இருக்கும். ஆனால், நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். எனது செயல் நன்றாக இருந்தாலும் அதனை நடைமுறைப்படுத்துவதற்காக நமது அணுகுமுறை இந்த இடத்தில் பிழையாக இருக்கும்.
ஒரு நல்ல செயலை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று முரண்பட்டு சண்டையிடுபவர்களும் உண்டு. உண்மையில் நாம் “நல்லதைச் செய்கிறேன்தானே” என்று வதிடும் பொழுது செயல் நன்றுதான். ஆனால், அதனை நடைமுறைப்படுத்தும் பொழுது தவறான அணுகுமுறையை கையாண்டு இருக்கிறோம் என்ற உண்மையையும் நாம் மறந்துவிடாமல் இருந்தால் பல முரண்பாடுகளுக்கு விடை கிடைக்குமல்லலவா?
- சரியான விடயம் + தவறான அணுகுமுறை = பிழை
- தவறான விடயம் + சரியான அணுகுமுறை = பிழை
- சரியான விடயம்+ சரியான அணுகுமுறை = சரி
சாரம்சம் :
எங்களுக்குள்ள பாரிய குறைபாடு சரியான அணுகுமுறைக்கான வழிமுறைகளின் அறியாமையே ஆகும்.
சரியான விடயத்தை பிழையாக, பிழையான விடயத்தை சரியாக, சரியான விடயத்தை சரியாகச் செய்தல்
கிண்ணியா – ஆர்.சதாத்
ஒரு விடயத்தைச் செய்வதற்கு முன் அந்த விடயம் சரியானதாக இருக்கும் ஆனால், அதனை நாம் நடைமுறைப்படுத்தும் பொழுது பிறரால் தவறானதாகக் கருதப்பட்டு அவ்விடயம் முடியாமலும் போய்விடுகிறது. இதற்கு காரணம் என்ன? சிலர் சரியான விடயத்தைச் செய்வதற்கு முனைந்து இருப்பார்கள். ஆனால், அந்தச் செயலால் முரண்பாடுகளும் விமர்சனங்களும் எழுகின்றன.
உண்மையில் செய்ய வந்த விடயம் சிறப்பானதாக இருக்கும். அந்தச் சிறந்த விடயம் ஏன் நடைமுறை படுத்துகின்ற பொழுது பிறரால் தவறாக நோக்கப்படுகிறது.? அந்த விடயம் சரியானதாக இருக்கலாம். ஆனால், அதனை நடைமுறைப் படுத்துகின்ற பொழுது அணுகுமுறை பிழையானதாக இருக்கும்.
அந்த இடத்தில் சரியான செயல் பிழையாகச் செய்தாலும் பிழையான செயல் சரியாகச் செய்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாமல்தான் இருக்கும். சரியான செயலைச் சரியான அணுகுமுறையோடு செய்கின்ற பொழுது மட்டுமே அந்த விடயம் வெற்றி பெற்ற விடயமாக மலரும்.
உதாரணமாக:- வகுப்பறையில் ஆசிரியர் ஒருவர் கற்பிப்பதற்காக ஒரு விடயத்தை தெரிவு செய்கிறார். என்றாலும் அந்த சரியான விடையத்தை சரியான அணுகுமுறை நுட்பமுறைகள் போன்றவைகளோடு மாணவர்களுக்கு வழங்குகின்ற பொழுதுதான் அது சரியாக மாணவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதன் விளக்கத்தை பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.மாறாக அந்தச் சரியான விடயம் மாணவர்களுக்குப் பொருத்தமற்ற அணுகுமுறைகளோடு கற்பித்தால் அந்த நல்ல செயலும் பிழையாகவே நோக்கப்படும்.
சிலர் வாதிடுவது உண்டு “எனது விடயம் நல்லதுதானே சிலர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லையே? ஏன் விமர்சிக்கிறார்கள்” என்ற கவலை இருக்கும். ஆனால், நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். எனது செயல் நன்றாக இருந்தாலும் அதனை நடைமுறைப்படுத்துவதற்காக நமது அணுகுமுறை இந்த இடத்தில் பிழையாக இருக்கும்.
ஒரு நல்ல செயலை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று முரண்பட்டு சண்டையிடுபவர்களும் உண்டு. உண்மையில் நாம் “நல்லதைச் செய்கிறேன்தானே” என்று வதிடும் பொழுது செயல் நன்றுதான். ஆனால், அதனை நடைமுறைப்படுத்தும் பொழுது தவறான அணுகுமுறையை கையாண்டு இருக்கிறோம் என்ற உண்மையையும் நாம் மறந்துவிடாமல் இருந்தால் பல முரண்பாடுகளுக்கு விடை கிடைக்குமல்லலவா?
1. சரியான விடயம் + தவறான அணுகுமுறை = பிழை
2. தவறான விடயம் + சரியான அணுகுமுறை = பிழை
3. சரியான விடயம்+ சரியான அணுகுமுறை = சரி
சாரம்சம் :
எங்களுக்குள்ள பாரிய குறைபாடு சரியான அணுகுமுறைக்கான வழிமுறைகளின் அறியாமையே ஆகும்.
2026.07.13

Ralihan Sathath is an accomplished academic, veteran educator, and curriculum specialist with over two decades of experience in Tamil language, literature, and educational content development. He currently serves as a Resource Person for Tamil & Literature at the Zonal Education Office in Kinniya.
With a strong academic foundation including a B.A., an M.Ed., a PGDE, and an M.Phil (Thesis Submitted) in Tamil from the South Eastern University of Sri Lanka, Mr. Sathath has spent over twenty years shaping the educational landscape. He has been a key contributor to national education, compiling textbooks, study modules, and Teacher Instructional Manuals (TIM) for the National Institute of Education (NIE) and the Educational Publications Department.
An accomplished author, he has published prominent educational works, including ‘Thirukural Vina Vidai’ and ‘Salavaikal’. At KVC Media, Mr. Sathath brings his deep linguistic expertise, technical insight into e-learning, and passion for Tamil literature to deliver impactful, thought-provoking commentary and educational insights for our readers.