குச்சவெளி

கழிவு தேயிலை தூள் ஏற்றிச் சென்ற வாகனம் விசேட அதிரடிப்படையினரால் சோதனை

நேற்று இரவு பூண்டுலோயா பகுதியிலுள்ள தனியார் தேயிலை தொழிற்சாலையொன்றுக்கு ஏற்றிச் செல்லப்பட்ட 2,755 கிலோ கழிவு தேயிலைத் தூளை தலவாக்கலை, விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

மேலும் இரு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
அக்கரபத்தனை, போபத்தலாவ பகுதியிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட கழிவுத் தேயிலை தூள் பைகளை பூண்டுலோயாவில் உள்ள தொழிற்சாலையொன்றிற்கு கொண்டு சென்று பின்னர் கம்பளைக்கு கடத்தவே திட்டமிடப்பட்டிருந்தது.

இது தொடர்பில் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமையவே கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

நீண்ட நாட்களாக இவர்கள் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். சந்தேக நபர்களும், கைப்பற்றப்பட்ட கழிவு தேயிலைத் தூளும் பூண்டுலோயா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *