குச்சவெளி

குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் தலைமையில் திரியாய் கல்லம்பத்தை கிராமத்தில் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

தற்போது நாட்டினை அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வைரஸ் தொற்றினால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அன்றாட உணவுகளுக்கு கூட மிகவும் கஷ்டப்படுகின்றனர். அதற்கமைய குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட திரியாய் கல்லம்பத்தை கிராமங்களில் உள்ள மக்களும் இவ்வாறான இன்னல்களை எதிர்கொள்கின்றனர். இவ்விடயம் தொடர்பாக அவ் வட்டாரத்தின் கௌரவ உறுப்பினர் R.கஜநிதி அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இன்று 07.04.2020 ம் திகதி குச்சவெளி பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் A.முபாரக் அவர்களின் தலைமையில் கல்லம்பத்தை ஸ்ரீ விநாயகர் சனசமூக நிலையத்தின் ஏற்ப்பாட்டில் அப் பகுதியிலுள்ள குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் குச்சவெளி பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர் R.கஜநிதி, பொது சுகாதார பரிசோதகர் M.சுதார்தீன், ஸ்ரீ விநாயகர் சனசமூக நிலையத்தின் நிர்வாகிகள், பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள், கோவில் நிர்வாகிகள், ஊர் பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *