AllNews

கொரோனாவினால் வைத்தியசாலைகளில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..

கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

அதே போன்று இந்த மாதத்தில் கடந்த 15 நாட்களுக்குள் மாத்திரம் 3715 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

மேலும் டெங்கு நோய் அறிகுறிகள் காணப்பட்டால், தாமதமின்றி மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்வது அவசியமானது என விசேட வைத்திய நிபுணர் சிரந்தி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், நிலவும் கொவிட் தொற்றுநோய் காரணமாக சில டெங்கு நோயாளர்கள் வைத்தியசாலைகளுக்கு செல்ல தயங்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *