News

சீதுவ இராணுவ விசேட படைப்பிரிவின் முகாம் தனிமைப்படுத்தப்பட்டது.

சீதுவ இராணுவ விசேட படைப்பிரிவின் கப்டன் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டதையடுத்து அந்த படை முகாம் இன்று தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டது. அவருடன் தொடர்புபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட சிப்பாய்கள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படவுள்ளனர்.இவரின் மனைவி வெலிசர கடற்படை முகாமில் பணியாற்றி கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருந்த நிலையில் இவருக்கும் தொற்று இனம் காணப்பட்டது. இவர் பலருடன் பழகியிருக்கலாம் என்பதால் பொலிஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *