குச்சவெளி

சமூகப் பாதுகாப்பு நிதியத்திற்கு இன்றும் பல மில்லியன் அன்பளிப்பு

இலங்கையில் இன்று (08) கோவிட் 19 சுகாதார பாதுகாப்பு நிதியத்திற்கு 97மில்லியன் ரூபாய்கள் அன்பளிப்பு செய்யப்பட்டது.

அமைச்சர் சமல் ராஜபக்ஷ தனது அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள் 29.5 மில்லியன், அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் அன்பளிப்பு 2.8 மில்லியன், யுனிலீவர் ஸ்ரீ லங்கா லிமிடட் 10 மில்லியன், முகாமைத்துவம் தொடர்பான பட்டப் பின்படிப்பு நிறுவனம் 5 மில்லியன், கிரம விமலஜோதி தேரர் பௌத்த கலாசார மத்திய நிலையம் 2 மில்லியன், அத்தனகல்ல ரஜமகா விகாரை 10 மில்லியன், மலலசேகர மன்றம் 3 மில்லியன் ரூபாய்களும், அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தனது அமைச்சுப் பதவிக்கான ஏப்ரல் மாத சம்பளத்தையும், மேலும் பல உதவிகளும் இன்று கிடைக்கப்பெற்றுள்ளது.

இன்று பிற்பகலாகும் போது கொவிட் 19 சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 517மில்லியன் ரூபாவை கடந்துள்ளது.

இலங்கை வங்கியின் 85737373என்ற இலக்க சமூகபாதுகாப்பு நிதியத்திற்கு உள்நாட்டு வெளிநாட்டில் வசிக்கும் எந்தவொருவருக்கும் அன்பளிப்புகளை செய்ய முடியும்.  மேலும் சட்டபூர்வமான கணக்கின் மூலம் நிதியத்திற்கு செய்யப்படும் அன்பளிப்புகள் வரி மற்றும் வெளிநாட்டு நாணய சட்ட திட்டங்களில் இருந்து விலக்களிக்கப்படும்.

மேலதிக தகவல்களுக்கு +94-112354479, +94-11354354 என்ற இலக்கத்தின் மூலம் தொடர்பு கொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *