News

நற்பிட்டிமுனை தாருல் ஹிக்மா மகளிர் கல்லூரியில் ரஹ்மத் மன்சூர் விஜயம் – எதிர்காலத் திட்டங்கள் குறித்து ஆலோசனை

கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபக தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்கள், நற்பிட்டிமுனை தாருல் ஹிக்மா மகளிர் அரபுக் கல்லூரிக்கு நேற்று (13) விஜயம் மேற்கொண்டார்.

இந்த நேரத்தில், மாணவிகளின் கல்வி முன்னேற்றம், எதிர்கால திட்டங்கள் மற்றும் பயனுள்ள கல்வி நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனைகளும், ஊக்கமும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வு, கல்லூரியின் அதிபர் நாசீர் ஹனி மௌலவி அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்வில், CSWMA பேரவையின் தலைவி சகோதரி சீனியா தாஸிம் மற்றும் YWMA பேரவையின் தலைவி சகோதரி பவாஸா தாஹா ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்துகொண்டு, நிகழ்வை மேலும் சிறப்பித்தனர். அவர்களுக்கு நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் உலமாக்கள், கல்லூரி நிர்வாக உறுப்பினர்கள், ஊர்முக்கியஸ்தர்கள் மற்றும் ரஹ்மத் பவுண்டேசனின் உயர்பீட உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *