குச்சவெளி

திருகோணமலை – குச்சவெளி பிரதேசத்தில்; கடற்தொழில் ஈடுபட்ட மீனவர்களுக்கு  துப்பாக்கி சூடு..!

– ஒருவர் அவசர பிரிவில் அனுமதி –

இன்று 2015-June-03 திருகோணமலை குச்சவெளி பிரதேசத்தில் கடற்தொழிலில் ஈடுபட்ட மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினரால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

குறித்த துப்பாக்கி சூட்டில் குச்சவெளி பிரதேச இளைஞன் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில், குச்சவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன்.

மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் தற்போது  இடம் மாற்றப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

#KVCMedia | #Kuchchaveli | #SLNavy | #Trincomalee

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *