Breaking NewsLocal NewsSri Lanka

எரிவாயு விலை அதிரடி அதிகரிப்பு: நள்ளிரவு முதல் புதிய விலை அமல்!

இலங்கையில் முன்னணி எரிவாயு விநியோக நிறுவனமான லாவ்ஸ் எரிவாயு (LAUGFS Gas PLC), இன்று (மே 06) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அதன் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர் மீள்நிரப்பு விலைகளை அதிகரிப்பதாக அறிவித்துள்ளது.  

புதிய விலை விபரங்கள் (கொழும்பு மாவட்டம்):

சர்வதேச சந்தையில் நிலவும் கொள்முதல் மற்றும் தளவாட செலவுகள் அதிகரித்துள்ளமையைக் கருத்திற் கொண்டு இந்த விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி புதிய விலைகள் வருமாறு:

• 12.5 கிலோ எரிவாயு சிலிண்டர்: இதன் விலை 545 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி புதிய விலை 6,245 ரூபாவாகும்.  

• 5 கிலோ எரிவாயு சிலிண்டர்: இதன் விலை 220 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி புதிய விலை 2,500 ரூபாவாகும்.  

உலகளாவிய நெருக்கடியின் தாக்கம்

சர்வதேச சந்தையில் எரிவாயு கொள்வனவு செய்யும் போது ஏற்படும் கூடுதல் செலவீனங்களை சமாளிக்கும் பொருட்டே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக லாவ்ஸ் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனினும், நுகர்வோருக்குத் தடையின்றி எரிவாயுவை விநியோகிக்கத் தாம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

அதேவேளை, மற்றுமொரு பிரதான விநியோக நிறுவனமான லிட்ரோ எரிவாயு (Litro Gas) மே மாதத்திற்கான விலைகளில் எவ்வித மாற்றமும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.