Education sri lanka KVC Media

ஆர்.சதாத்

“ஊரோடு ஒட்டி ஒழுகார் பல கற்றும்
கல்லார் அறிவிலாரே”

என்பது பொய்யாமொழியாரின் கூற்றாகும். அதாவது சமூகத்தோடு ஒட்டி உறவாடி அவர்கள் மூலமாக பல்வேறு அனுபவங்களையும் அறிவையும் தேவைகளையும் நிறைவு செய்து கொள்ள வேண்டும்.

அவ்வாறு இல்லாமல் தான் “தனித்தே இயங்குவேன்” என சுயநலமிகளாக வாழ்பவர்கள் எவ்வளவுதான் கற்றாலும் அவர்கள் அறிவில்லாதவர்களே என்கிறார் வள்ளுவர்.

“மனிதன் ஒரு சமூகப் பிராணி” என்பதனை உணர்ந்த கல்வியலாளர்கள் கல்வியும் சமூக இலக்குகளையும் வரையறை செய்து கல்விச் செயற்பாடுகளை முன்வைக்கின்றார்கள்.

இந்த வகையில் சோக்ரடீஸ், பிளேட்டோ ரூஸோ, ஜோன் டூயி, அல்பிரட் லைட், மகாத்மா காந்தி, ரவிந்திரநாத் தாகூர், ஐடு கிரிஸ்ணமூர்த்தி போன்ற தத்துவ ஞானிகள் கல்வியினால் எதிர்பார்க்கப்படும் சமூக இலக்குகள் பலவற்றை வரையறைக்குட்படுத்தி நோக்குகின்றனர். இதில் மூன்று இலக்கினை சுருக்கமாக அலசுவோம்.

மற்றவர்களுடன் சேர்ந்து வாழும் ஆற்றல்

மற்றவர்களுடன் சேர்ந்து வாழும் ஆற்றலை விருத்தி செய்தல் என்பது கல்வியின் சமூக இலக்குகளில் பிரதானமானதாகும்.

இன்று உலகம் பரந்துபட்டு விளங்கினாலும் தகவல் தொழில்நுட்பம் காரணமாக பூகோள கிராமமாக மாறி வருகின்றது. இதனால் தகவல்த் தொடர்பாடல் மூலமாக பலதரப்பட்ட நாடு, மத, இன, மொழி ரீதியில் வேறுபாடு கொண்டவர்களுடன் தொடர்புகளை வைக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

அது மடடுமன்றி சொந்த ஊர் நாடுகளிலும் அயலவன் என்ற ரீதியிலும் தொடர்புகள் பேண வேண்டியுள்ளன. இத்தொடர்புகளை கண்ணியமாகவும் சிறப்பாகவும் பேணி உறவுகளை

நிலைப்படுத்த வேண்டிய தேவை ஏற்படுகிறது. இதற்காகத்தான் கல்வி, இப்பணியினை செய்ய வேண்டியுள்ளது. என்பதனை இரவீந்திரநாத் தாகூரும்

“தெய்வத்தினதும் உலகத்தினதும் மனிதனதும் ஐக்கியத்தை போஷித்தல் கல்வியின் இலக்காக வேண்டும்”

என வாதிட்டார்.

மேலும் பேர்டன் ரஸ்ஸ என்பவர் கல்வி சமூகத்திற்கு பயனுள்ள தனியாளை உருவாக்க வேண்டும் என்கிறார். இதன் நிமித்தமே யூனஸ்கோவும் ஏனையவர்களுடன் சேர்ந்து வாழக் கற்றல் என்கிறது.

ஏனெனில், இன்றைய மனித நாகரீகத்தில் ஒருவருக்கொருவாஇன, மத, மொழி, நாடு ரீதியில் போட்டி, பொறாமை. மனக்குரோதம் என்பவைகளே வளர்ந்து செல்கின்றன.

இதனை அடுத்த சந்ததியினருக்கும் விட்டுச் செல்ல வேண்டிய நிர்பந்தததில் விழாமல் இருக்க கல்வியானது சீர் செய்ய வேண்டும்.

“இளமையிற் கல்வி சிலையில் எழுத்து” என்பதற்கினங்க கல்வியானது இளமையிலேயே மாணவர்களை மற்றவர்களுடன் சேர்ந்து வாழ்வதற்கு வழிப்படுத்துகிறது.

சமூகமயமாக்கல்

“சமூகமயமாக்கல்” என்பது கல்வியின் பிறிதொரு சமூக இலக்காகும். அதாவது அறியாப்பருவக் குழந்தை சுய விழிப்புணர்வும் அறிவும் பெற்று மனிதராக மலர்ச்சி பெறவும் தாம் பிறந்த சமூகத்தின் கலாசார நடைமுறைகளை அறிந்து கொள்ளவும் அதனைப் பேணுவதில் திறன் பெறவும் இட்டுச் செல்லும்.இச் செயன்முறையே சமூகமயமாக்கல் ஆகும்.ஆர்.சதாத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *