News

தம்பலகாமம் பிரதேச செயலக வளாகத்தில் சிறு விற்பனை கண்காட்சி..!

சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி  பிரிவினால் சிறு தொழில் முயற்சியாளர்களை ஊக்கப்படுத்தல் மற்றும் அவர்களுக்கான சந்தை வாய்பை அதிகரிக்கும் நோக்கில் (28)   புதன்கிழமை தம்பலகாமம் பிரதேச செயலக வளாகத்தில் சிறு விற்பனை கண்காட்சி (mini fair) ஏற்பாடு செய்யப்பட்டது.

தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க இடம் பெற்ற குறித்த விற்பனை கண்காட்சி நிகழ்வை தம்பலகாமம் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.

உள்ளூர் உற்பத்தியாளர்களின் உற்பத்திகளை அதிகரிக்கவும் ஊக்குவிக்கவும் குறித்த சிறு விற்பனை கண்காட்சி இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதில் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜீப் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் மாவட்ட உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *