News

மீண்டும் PCR பரிசோதனை!
– சுகாதார அமைச்சு..!

புதிய COVID-19 மாறுபாட்டால் உலகளவில் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, சில வைத்தியசாலைகளில் PCR பரிசோதனைகளை சுகாதார அமைச்சு அதிகரித்துள்ளது.

சுகாதார அமைச்சின் செயலாளர் கலாநிதி அனில் ஜயசிங்கயின் கூற்றுப்படி, PCR பரிசோதனை வசதிகள் கொண்ட வைத்தியசாலைகள் இப்போது எந்தவொரு COVID-19 நோயாளிகளையும் கண்டறிய உயர் எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இன்று (28) சுகாதார அமைச்சில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதை வெளியிட்டார்.
மேலும், காய்ச்சலுடன் அனுமதிக்கப்படும் அல்லது சிகிச்சை நாடும் நோயாளிகளின் கண்காணிப்பை மேம்படுத்துமாறும் வைத்தியசாலைகளுக்கு அமைச்சு அறிவுறுத்தியுள்ளதாக செயலாளர் தெரிவித்தார்.

இலங்கை நிலைமையை தொடர்ந்து உன்னிப்பாக கண்காணிக்கும் என்றும், ஆனால் உடனடியாக எந்த கட்டுப்பாடுகளையும் விதிக்கும் திட்டம் இல்லை என்றும் கலாநிதி ஜயசிங்க மேலும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *