News

கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் மூலம் ஒலுவில் பிரதேசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளர்களுக்கு பொதுக்கிணறுகள் வழங்கிவைப்பு…!

ஒலுவில் பிரதேசத்தில் தேவையுடைய பயனாளிகள் தமக்கு பொதுக்கிணறுகள் அமைத்துத்தருமாறு கல்முனை ரஹ்மத் பவுண்டேசனிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக YWMA பேரவையின் ஒருங்கிணைப்பில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும், கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் ஸ்தாபகருமான ரஹ்மத் மன்சூர் அவர்கள் மிகவும் குறுகிய நாட்களுக்குள் இப் பொதுக்கிணற்றினை அமைத்து பயனாளிகள் பாவனைக்காக திறந்து கையளித்து வைத்தார்.

இதன்போது பயனாளிகளுடன், முக்கியஸ்தர்கள்,  பிரதேசவாசிகள், நலன்வி்ரும்பிகள், பவுண்டேசன் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

– ஏ.எஸ்.எம்.அர்ஹம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *