Sunday, July 26, 2026
Latest:
AllBreaking NewsGulfKuwaitLatest

$1,600 கோடி பிரம்மாண்ட முதலீடு: அமெரிக்க நிறுவனங்களுடன் வரலாற்றுச் சாதனை ஒப்பந்தம் மேற்கொண்டது குவைத்!

வளைகுடா நாடான குவைட்டின் பொருளாதார வரலாற்றில் புதிய மைல்கல்லாக, நாட்டின் கச்சா எண்ணெய் குழாய் வலையமைப்பிற்காக (Crude Oil Pipeline Network) $16 பில்லியன் (சுமார் இந்திய மதிப்பில் ரூ.1.33 லட்சம் கோடி) மதிப்பிலான மாபெரும் குத்தகை ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

குவைத் பெட்ரோலியக் கழகத்தின் (KPC) துணை நிறுவனமான குவைத் ஆயில் கம்பெனி (KOC), உலகின் முன்னணி முதலீட்டு நிறுவனங்களான பிளாக்ஸ்டோன் (Blackstone), ப்ரூக்ஃபீல்டு (Brookfield) மற்றும் கே.கே.ஆர் (KKR) ஆகியவற்றுடன் இணைந்து இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தைச் எட்டியுள்ளது. இது குவைட்டின் வரலாற்றில் பதிவான மிகக் மிகப்பெரிய நேரடி வெளிநாட்டு முதலீடு (FDI) ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘பெறிகிரின் திட்டம்’ (Project Peregrine) பின்னணி என்ன?

‘பெறிகிரின் திட்டம்’ (Project Peregrine) என்று அழைக்கப்படும் இந்த முதலீட்டுத் திட்டத்தின் கீழ், குவைத் ஆயில் கம்பெனி மேற்கண்ட மூன்று அமெரிக்க முதலீட்டு நிறுவனங்களுடன் இணைந்து ஒரு கூட்டு நிறுவனத்தை (Joint Venture) உருவாக்குகிறது. இது குத்தகை மற்றும் மீள்-குத்தகை (Lease and Leaseback) கட்டமைப்பின் கீழ் 20.5 ஆண்டுகள் கால அவகாசத்தைக் கொண்டுள்ளதுடன், அளவு அடிப்படையிலான கட்டண முறையையும் (Volume-based tariff) உள்ளடக்கியது.

இந்த ஒப்பந்தத்தின்படி, புதிய கூட்டு நிறுவனத்தில் பிளாக்ஸ்டோன், ப்ரூக்ஃபீல்டு மற்றும் கே.கே.ஆர் ஆகிய நிறுவனங்கள் கூட்டாக 49 சதவீத பங்குகளைப் பெற்றிருக்கும். அதே நேரத்தில், குவைத் ஆயில் கம்பெனி (KOC) 51 சதவீத பெரும்பான்மைப் பங்குகளைத் தன்வசம் வைத்திருப்பதோடு, குழாய் வலையமைப்பின் முழுமையான உரிமை மற்றும் செயல்பாட்டுக் கட்டுப்பாட்டையும் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளும்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் மூலதனத்திற்கும் ஒரு திருப்புமுனை

இதுகுறித்து குவைத் பெட்ரோலியக் கழகத்தின் துணைத் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஷைக் நவாஃப் சவூத் அல்-சபா (Shaikh Nawaf Saud Al-Sabah) வெளியிட்ட அறிக்கையில், “சவாலான பிராந்தியச் சூழலிலும் கூட, உலகளாவிய முதலீடுகளுக்கு குவைத் தொடர்ந்து ஒரு பாதுகாப்பான மற்றும் கவர்ிகரமான நாடாகத் திகழ்கிறது என்பதை இந்த ஒப்பந்தம் உலகிற்குப் பறைசாற்றியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் பரிவர்த்தனை மூலம் உடனடியாக தோராயமாக $7.85 பில்லியன் முன்பணம் (Upfront proceeds) கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிதி நாட்டின் உள்நாட்டு முதலீட்டுத் திட்டங்கள் மற்றும் எதிர்கால வளர்ச்சிப் பணிகளுக்குப் பெரிதும் உதவியாக இருக்கும் என KPC தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளைகுடா நாடுகளின் உள்கட்டமைப்பு பணமாக்கல் (Infrastructure Monetisation) போக்கு

தற்போதைய காலகட்டத்தில் வளைகுடா பிராந்தியத்தைச் சேர்ந்த நாடுகளின் அரசு எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் இறையாண்மை முதலீட்டு நிறுவனங்கள், தங்களது உள்நாட்டு உள்கட்டமைப்பு சொத்துக்கள் மூலம் மூலதன திரட்டலில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. சவுதி அரேபியாவின் அராம்கோ (Aramco), அபுதாபியின் அட்நாக் (ADNOC) மற்றும் பஹ்ரைனின் பாப்கோ எனர்ஜி போன்ற நிறுவனங்களைத் தொடர்ந்து தற்போது குவைத்தும் இந்த வரிசையில் இணைந்துள்ளது.

குவைத் நாடு உலகளாவிய எண்ணெய் இருப்புகளில் சுமார் 6 சதவீதத்தைக் கொண்டுள்ள போதிலும், நாட்டின் எதிர்கால பொருளாதார வைப்பு நிதி மற்றும் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக வெளிநாட்டு மூலதன ஈர்ப்பை அதிகரித்து வருகிறது. இந்த ஒப்பந்தம் மூலம் கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் சுத்திகரிப்பு அளவுகளில் எந்தவிதமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாது எனவும், முழு அதிகாரமும் குவைத் அரசின் வசமே இருக்கும் எனவும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச பொருளாதாரச் சந்தைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இந்த முக்கிய நிகழ்வு குறித்த உடனுக்குடனான தகவல்களைத் தொடர்ந்து அறிய KVC Media உடன் இணைந்திருங்கள்.

Abdul Razak Muzammil

A. R. Muzammil Bsc (Hons) UK is the Founder & Editor‑in‑Chief of KVC Media, a digital news platform serving Sri Lanka and the Middle East, and the Founder of the Riaya Foundation, which empowers youth in Kuchchaveli. Professionally, he serves as the Assets & CAFM Manager at an International Airport, bringing over 14 years of expertise to major infrastructure projects. In 2026, he became Sri Lanka’s first CAMA² certified professional. Holding a BSc (Hons) from the University of Westminster, Muzammil bridges the gap between technical leadership and community-driven media innovation.