கதிர்காமம்செட்டிபாளையம்விபத்துகார் விபத்துலொறிசாலை விபத்து10 பேர் காயம்அவசர மீட்புஇலங்கை செய்திகள்KVC Media
களுவாஞ்சிகுடி பொலிஸ்பிரிவுக்குட்ப செட்டிபாளையம் பகுதியில் இன்று (25) காலை 8 மணியளவில் பாரிய விபத்துச் சம்பம் ஒன்று பதிவாகியுள்ளது.
மட்டு கல்முனை சாலைவழியே வாழைச்சேனையிலிருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த கார் செட்டிபாளையம் சித்திவிநாயகர் ஆயத்திற்கு அருகாமையில் வைத்து கல்முனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த லொறியுடன் நேருக்கு நேர் மோதியுள்ளது.
அதிவேகமாக பயணித்த வாகனங்கள் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் விபத்தில் சிக்கிக்கொண்டுள்ளன. இந்த விபத்தில் காரில் இருந்த குழந்தைகள் உட்பட மூவரும் லொறியில் பயணித்த இருவருமாக மொத்தம் ஐந்துபேர் காயமடைந்ததோடு மேலதிக சிகிச்சைக்காக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
இரு வாகனங்களும் குடைசாய்ந்த இவ் பாரிய விபத்து உயிரிழப்பின்றி தவிர்க்கப்பட்டமை கடவுளின் சித்தமே என விபத்தை நேரில் பார்த்தோர் தெரிவிக்கின்றனர். விபத்தில் சிக்கிய லொறி கல்முனை தொடக்கம் மட்டக்களப்பு வரை வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவது என தெரிவிக்கப்படுகிறது
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்துச் செல்கின்றனர்.

Jalaldeen Fazim is a young, dynamic journalist and field reporter for KVC Media, covering breaking news, regional governance, and community stories across Sri Lanka. Driven by a commitment to impactful, community-centric storytelling, he utilizes modern digital tools to deliver timely and accurate on-the-ground reporting. At KVC Media, Fazim focuses on elevating local narratives to a global audience, bridging the gap between grassroots public issues and progressive digital journalism.
