Wednesday, July 22, 2026
Latest:
Breaking NewsLatestSri Lanka

ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு விசாரணை: முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், தன்னை கைது செய்வதைத் தடுக்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தாக்கல் செய்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் சரத் திஸாநாயக்க ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில், இந்த மனு தொடர்ந்து இரண்டாவது நாளாக விசாரணை செய்யப்பட்டது.

இன்றைய விசாரணையின் போது, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, மனு தொடர்பான மேலதிக சமர்ப்பணங்களை முன்வைத்தார்.

இரு தரப்பு சமர்ப்பணங்களையும் கருத்திற்கொண்ட நீதிமன்றம், வழக்கின் மேலதிக விசாரணைகளை ஜூலை 06 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக உத்தரவிட்டது. முன்னதாக, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Abdul Razak Muzammil

A. R. Muzammil Bsc (Hons) UK is the Founder & Editor‑in‑Chief of KVC Media, a digital news platform serving Sri Lanka and the Middle East, and the Founder of the Riaya Foundation, which empowers youth in Kuchchaveli. Professionally, he serves as the Assets & CAFM Manager at an International Airport, bringing over 14 years of expertise to major infrastructure projects. In 2026, he became Sri Lanka’s first CAMA² certified professional. Holding a BSc (Hons) from the University of Westminster, Muzammil bridges the gap between technical leadership and community-driven media innovation.