News

அனைத்து அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்க ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவை கலந்துரையாடியது.*

எதிர்வரும் சிங்கள, தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முன்னர் அனைத்து அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

மேலும், இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரிகளை குறைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும், எதிர்வரும் காலங்களில் விலை அதிகரிப்பு இருக்காது எனவும், விலை குறைப்பு மட்டுமே மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பயன்படுத்தி தேங்காய் எண்ணெய் இறக்குமதியை மட்டுப்படுத்துவது மற்றும் உள்ளூர் தேங்காய் எண்ணெய் உற்பத்திகளின் தரத்தை மேம்படுத்துவது தொடர்பாக விவசாய அமைச்சில் இன்று (14) நடைபெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *