News

புலனாய்வு அறிக்கையிடல் செயலமர்வு..!!

AHRC நிறுவனத்தின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான புலனாய்வு அறிக்கையிடல் தொடர்பான செயலமர்வு இன்று (15) திருகோணமலையிலுள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றது.

இதன்போது புலனாய்வு அறிக்கையிடல் என்றால் என்ன? இபுலனாய்வு அறிக்கையிடல் செய்வதற்கு எவ்வாறு தகவல் சேகரிப்பது? எவ்வாறு நடு நிலைமையாக அறிக்கையிடல் செய்வது? உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக விளக்கங்கள் வழங்கப்பட்டன.

இச் செயலமர்வில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் பங்குபற்றியிருந்தனர். வளவாளராக வீரகேசரி பத்திரிகையின் ஊடகவியலாளர் பஷீர் அவர்கள் கலந்து கொண்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *