Wednesday, July 22, 2026
Latest:
Breaking News

ஈரான் – சீனா கைகோர்ப்பு: வெளியுறவு அமைச்சர் பெய்ஜிங் வருகை..!

ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி (Abbas Araghchi), மே 6, 2026 அன்று சீனத் தலைநகர் பெய்ஜிங்கைச் சென்றடைந்தார். அங்கு அவர் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ (Wang Yi) உடன் முக்கியப் பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.

ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் மற்றும் சர்வதேசப் பொருளாதார பாதிப்புகள் நிலவும் சூழலில் இந்தப் பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மே 14-15 தேதிகளில் சீனாவுக்குச் செல்லவிருக்கும் நிலையில், அதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக ஈரானிய அமைச்சரின் இந்தப் பயணம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. ஈரானின் கச்சா எண்ணெய்யை வாங்கும் மிகப்பெரிய நாடாகச் சீனா இருப்பதால், ஈரானின் பொருளாதாரத்திற்குச் சீனா ஒரு முக்கியத் தூணாக விளங்கி வருகிறது.

Abdul Razak Munowfer

A. R. Munowfer is a versatile multi-platform journalist, civil engineer, and the head of creative production at KVC Media. Combining his analytical engineering background with a passion for visual storytelling, he directs the platform’s graphic design, video editing, and complete digital media production. At KVC Media, Munowfer focuses on bridging the gap between complex regional data and engaging multimedia content, delivering high-impact broadcast graphics, verified news design, and compelling video journalism for a global audience.