InternationalNews

சவுதியில் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு

பிரதமர் மோடி சவுதி அரேபியா சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி சவுதி அரேபியா கிளம்பி சென்றார். இந்த பயணத்தின் போது, அரசியல், வர்த்தகம், சுகாதாரம், எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் இரு நாட்டு உறவை பலப்படுத்த பிரதமரின் இந்த பயணம் உதவும். மேலும் பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. ஹஜ் கோட்டா, பாதுகாப்பு விஷயங்கள் குறித்தும் விவாதிக்க உள்ளார்.

இதன்படி ஜித்தா நகருக்கு வந்தடைந்த பிரதமர் மோடிக்கு 21 குண்டுகள் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஜித்தா நகரில் பிரதமர் வந்து இறங்கியதும் அங்கு கூடியிருந்த இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் ‘ மோடி, மோடி’ என கோஷம் போட்டனர். அவர்களுக்கு வணக்கம் தெரிவித்தபடி பிரதமர் சென்றார். அவரை வரவேற்கும் விதமாக கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *