News

விடுதலை புலிகளினால் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் இருப்பதாக  புடவைக்கட்டு பகுதியில் அகழ்வு பணி இடம்பெற்றது…!

திருகோணமலை குச்சவெளி பிரதேச செயளகத்திற்கு உட்பட்ட புடவைக்கட்டு கிராமத்தின் காட்டு பகுதியில் யுத்த காலத்தில் விடுதலை புலிகளினால் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் புதைக்கப்பட்டு இருப்பதாக குச்சவெளி பொலிஸ் விசேட பிரிவுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், குச்சவெளி நீதிமன்றால் விடுக்கப்பட்ட விசேட அனுமதியினூடாக இன்று (09) காலை குறித்த பகுதியில் அகழ்வு பணி இடம்பெற்றது.

மேலும் அகழ்வு பணி 10 அடி ஆழம் தோண்டுவதற்கு நீதிமன்றால் வழங்கப்பட்டதுடன் குறித்த பகுதியில் ஆயுதப்பொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த அகழ்வு பணியில் குச்சவெளி பிரதேச செயளாலர்; குச்சவெளி, திருகோணமலை மற்றும் புல்மோட்டை விசேட பொலிஸ் பிரிவினரும்; புடவைக்கட்டு செந்தூர் பிரிவு கிராம உத்தியோகத்தர் மற்றும் குச்சவெளி பிரதேச சபை உப தவிசாளர் விஜயம் செய்தனர்.

அகழ்வு பணி தொடர்பான மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *