நாட்டில் அபிவிருத்தித் திட்டங்களை விரைவுபடுத்த போதுமான அளவுக்கு அரசாங்கத்திடம் நிதி உள்ளது!
அமைச்சர் பிமல் ரத்நாயக்க
அரசாங்கம் அடுத்த கட்டமாக நாட்டின் உட்கட்டமைப்பு, கல்வி மற்றும் அனைத்துத் துறைகளின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதில் கவனம் செலுத்தும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், பெரிய அளவிலான வளர்ச்சித் திட்டங்களை ஆரம்பிப்பதற்கு முன், நாட்டின் பொருளாதாரம், சட்டம் ஒழுங்கு மற்றும் சமூக சூழலை நிலைப்படுத்துவதற்கே அரசாங்கம் முதலிடம் கொடுத்ததாகக் கூறினார்.
அத்துடன் ‘மெட்ரோ பேருந்து’ சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், இலங்கை போக்குவரத்து சபைக்கு (SLTB) மேலும் 800 பேருந்துகள் இணைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அதிவேக நெடுஞ்சாலைகளை விரிவுபடுத்துதல், புதிய மருத்துவப் பீடங்களை நிறுவுதல் மற்றும் வீட்டுவசதித் திட்டங்களை உருவாக்குதல் போன்ற எதிர்காலத் திட்டங்களும் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நிதிப் பற்றாக்குறை இல்லை என குறிப்பிட்ட அமைச்சர், காலாவதியான நிர்வாக நடைமுறைகளும், தொழில்நுட்ப வல்லுநர்களின் பற்றாக்குறையுமே சில திட்டங்களைத் தாமதப்படுத்துவதாகக் கூறினார்.
இதற்கமைய அடுத்த 3 ஆண்டுகளுக்குள் இதற்குத் தீர்வு காணப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Jalaldeen Fazim is a young, dynamic journalist and field reporter for KVC Media, covering breaking news, regional governance, and community stories across Sri Lanka. Driven by a commitment to impactful, community-centric storytelling, he utilizes modern digital tools to deliver timely and accurate on-the-ground reporting. At KVC Media, Fazim focuses on elevating local narratives to a global audience, bridging the gap between grassroots public issues and progressive digital journalism.
