News

திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகிந்தபுர காட்டுப் பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்..!

இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை (10) பகல் இடம்பெற்றது.

மகிந்தபுர காட்டுப் பகுதியில் மாடு பார்ப்பதற்காகச் சென்ற வெருகல் – பூநகர் கிராமத்தைச் சேர்ந்த இராசையா கணேசன் (வயது 55)  என்பவரே யானை தாக்குதலுக்குள்ளாகி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சேருநுவர திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.ஜே.நூருல்லா வருகை தந்து சடலத்தை பார்வையிட்டு விசாரணை செய்த பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *