News

அஸ்வெசும நலன்புரி திட்டத்தில் புதிய பயனாளர்களை இணைத்துக்கொள்ளல்!

அஸ்வெசும நலன்புரி திட்டத்தில் புதிய பயனாளர்களை இணைத்துக் கொள்வதற்கான புதிய விண்ணப்பங்களை கோரும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாளை முதல் புதிய பயனாளர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படும் என பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

400,000 புதிய அஸ்வெசும பயனாளிகளைத் தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளது.

பயனாளிகளை தெரிவு செய்யும் போது பல்வேறு தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில் சில நிபந்தனைகளை திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

முன்னதாக, குடும்பங்களைத் தேர்ந்தெடுக்க பயன்படுத்திய விதிகளில் யாராவது இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியவில்லை என்றால், அவர்களும் இதன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *