மூதூர் | கல்விச் செய்தி
கிழக்கு மாகாண மட்ட ஆங்கில தினப் போட்டிகளில் மூதூர் கல்வி வலயத்தைச் சேர்ந்த தி/மூ/பாரதி மகா வித்தியாலயம் வரலாற்றுச் சாதனையைப் பதிவு செய்துள்ளது.
பாடசாலையின் 65 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக மூன்று மாணவிகள் தேசிய மட்டப் போட்டிகளுக்குத் தெரிவாகி பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
மேலும், மூதூர் கல்வி வலயத்திலிருந்து அதிகூடிய மாணவர்களை தேசிய மட்டத்திற்குத் தெரிவு செய்த பாடசாலையாகவும், ‘சொல்வதெழுதுதல்’ (Dictation) போட்டி நிகழ்வில் தேசிய மட்டத்திற்குத் தெரிவான ஒரே பாடசாலையாகவும் பாரதி மகா வித்தியாலயம் தனித்துவமான சாதனையைப் பதிவு செய்துள்ளது.
தேசிய மட்டத்திற்குத் தெரிவான மாணவிகள்
- செல்வி M. கிஷானிக்கா
- செல்வி P. பிரத்திசா
- செல்வி A. கஜித்தனா
இம்மாணவிகளுக்குச் சிறந்த முறையில் பயிற்சியளித்த ஆங்கிலப் பாட ஆசிரியர் திரு. செ. உதயன், ஒத்துழைப்பு வழங்கிய ஆசிரியர் திருமதி ஜீனத் ஷகீலா மற்றும் இச்சாதனைக்குப் பக்கபலமாக இருந்த பாடசாலை அதிபர் திரு. பு. ஜெயகாந்தன் ஆகியோருக்கும், பாடசாலைச் சமூகத்தினருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் தெரிவிக்கப்படுகின்றன.
இம்மாத இறுதியில் கொழும்பில் நடைபெறவுள்ள தேசிய மட்டப் போட்டிகளிலும் மாணவிகள் சிறப்பாகச் செயல்பட்டு, பாடசாலைக்கும் மூதூர் மண்ணுக்கும் மேலும் பெருமை சேர்ப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு கல்விச் சமூகத்தினரிடையே நிலவுகிறது.
மூதூர் பாரதி மகா வித்தியாலயத்தின் இந்த வரலாற்றுச் சாதனைக்குப் பாராட்டுகள்! தேசிய மட்டப் போட்டிகளிலும் மாணவிகள் வெற்றிபெற வாழ்த்துவோம்.

Head of Creative Production, KVC Media
Civil Engineer | Multi-Platform Journalist | Digital Media Professional View author profile

