img 4665

வாட்ஸ்அப் குழுவின் ஊடாக பெறுமதியான பரிசுப் பொதியை வழங்குவதாகக் கூறி, ஒருவரிடமிருந்து ரூ.14 இலட்சத்து 55 ஆயிரம் பணத்தை மோசடியாகப் பெற்றதாகக் கூறப்படும் 46 வயதுப் பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண், வாட்ஸ்அப் குழுவின் ஊடாக பெறுமதியான பரிசுப் பொதி கிடைக்கவுள்ளதாகக் கூறி, அதனை நம்பிய ஒருவரைத் தனது வங்கிக் கணக்கிற்கு ரூ.1,455,000 பணத்தை வைப்பிலிடச் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிதி மோசடி தொடர்பாகக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், பொலிஸ் கணினி குற்ற விசாரணைப் பிரிவின் வடமேல் மாகாணப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதனையடுத்து, வடமேல் மாகாண கணினி குற்ற விசாரணைப் பிரிவினரின் உதவியுடன், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் முனையத்தில் வைத்து நேற்று (30) குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் நுகேகொட பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய பெண் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் கணினி குற்ற விசாரணைப் பிரிவின் வடமேல் மாகாணப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

KVC Media – உண்மைகளை உடனுக்குடன் அறிந்துகொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *