BIA போதைப்பொருள் கைது

லங்கா பொஸ்பேட் நிறுவனத்திற்கான இயந்திர உதிரிப்பாகங்கள் இறக்குமதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் தொடர்பில், அந்நிறுவனத்தின் முன்னாள் விநியோக அதிகாரி ஒருவர் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் தகவலின்படி, ரத்நாயக்க முதியன்சேலாகே மத்தும பண்டார என அடையாளம் காணப்பட்ட சந்தேகநபர், நவம்பர் 6ஆம் திகதி காலை சுமார் 11.30 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

2017ஆம் ஆண்டு லங்கா பொஸ்பேட் நிறுவனத்திற்குச் சொந்தமான TGM 160 மில் இயந்திரத்திற்கான உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்த கொள்வனவு நடவடிக்கையே இந்த விசாரணைக்கு அடிப்படையாக அமைந்துள்ளது.

குறித்த கொள்வனவு நடவடிக்கையால் நிறுவனத்திற்கு 5,830 அமெரிக்க டொலர் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக விசாரணையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்தக் கொள்வனவு நடவடிக்கையுடன் தொடர்புடைய ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *