2026 அக்டோபரில் இலங்கைக்கு 735.6 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம்

2026 அக்டோபர் மாதத்தில் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் நாட்டுக்கு அனுப்பிய பணம் 735.6 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது. இது முந்தைய மாதத்துடனும் கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடனும் ஒப்பிடுகையில் அதிகரிப்பாகும்.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய வாராந்தப் பொருளாதாரக் குறிகாட்டிகள் அறிக்கையின்படி, 2026 செப்டம்பர் மாதத்தில் வெளிநாட்டுப் பணியாளர்களிடமிருந்து கிடைத்த பணப்பரிமாற்றம் 734.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது.

அதேவேளை, 2025 அக்டோபர் மாதத்தில் பதிவான 712 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டு அக்டோபரில் 23.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அதிகமாகக் கிடைத்துள்ளன.

இதன் மூலம், கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் சுமார் 3.3 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் அனுப்பும் பணம், நாட்டின் அந்நியச் செலாவணி வருவாயில் முக்கிய பங்களிப்பை வழங்கி வருகின்றது. அத்துடன், இலங்கையின் வெளிநாட்டுக் கொடுப்பனவு நிலைமையை வலுப்படுத்துவதிலும் இப்பணப்பரிமாற்றங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *