வத்தளையில் முச்சக்கரவண்டி திருட்டு மற்றும் திருடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வாகன உதிரிப்பாகங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
25 மற்றும் 28 வயதுடைய இருவரே நேற்று (20) பம்பலப்பிட்டிய பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஒக்டோபர் 15ஆம் திகதி முச்சக்கரவண்டி ஒன்று திருடப்பட்டதாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து இந்தக் கைதுகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் முச்சக்கரவண்டி திருட்டுடன் தொடர்புடையவர் எனவும், மற்றையவர் திருடப்பட்ட சொத்துக்களை வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படுபவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சோதனை நடவடிக்கையின்போது, ஐந்து முச்சக்கரவண்டி இயந்திரங்கள், இரண்டு முச்சக்கரவண்டி சட்டகங்கள் (Chassis), ஒரு முச்சக்கரவண்டி, ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் பல வாகன இலக்கத் தகடுகள் உள்ளிட்ட பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட இருவரும் வத்தளை பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பம்பலப்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ஆதாரங்கள் : பொலிஸார் வழங்கிய தகவல்களை அடிப்படையாகக் கொண்ட செய்தி. விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், சந்தேகநபர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட வேண்டியவை.

Abdul Razak M. Muzammil is Founder and Editor-in-Chief of KVC Media. View author profile

